தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் வாகன ஊர்தியை டெல்லி குடியரசு தின விழாவில் புறக்கணித்த ஒன்றிய பாஜக அரசை கண்டித்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் உருவம் பொறித்த முகமூடி அணிந்தும்

 விடுதலைப் போராட்ட வீரர்களின் அலங்கார ஊர்தி பேரணி மற்றும் உறுதி ஏற்பு நிகழ்ச்சி மற்றும் ஆர்ப்பாட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே நடந்தது. இந்நிலையில் ஒன்றிய அரசின் செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில்

குடியரசு தினமான இன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வ.உ.சி, வேலுநாச்சியார், பாரதியார்,குயிலி, மருது சகோதரர்கள் ஆகியோரின் உருவப்படங்களுடன் ரத ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்தனர். அந்த ஊர்வலத்திற்கு காவல் துறை அனுமதி மறுத்த நிலையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் பெரியார் சிலை அருகே ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது முழக்கங்களை எழுப்பினர்.

 இந்நிகழ்ச்சிக்கு வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சுரேஷ் அவர்கள் தலைமை தாங்கினார், இந்நிகழ்வில் வாலிபர்சங்கத்தின் மாநகர் மாவட்டச் செயலாளர் பா.லெனின், சிறப்புரையாற்றினார் பேரணியை சிபிஎம் மத்திய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் ஸ்ரீதர் அவர்கள் துவக்கி வைத்தார்.

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா வாழ்த்துரை வழங்கினார் இந்நிகழ்வில் நிர்வாகிகள் சேதுபதி, அஜித்குமார், ஷாஜகான், கிச்சான், முகேஷ், ராகிலா பானு உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக மாவட்ட பொருளாளர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.