திருச்சி உறையூர் நாச்சியார் கோவில் அருகில் புதிய தமிழக கட்சியின் மாநில கொள்கை பரப்பு துணை பொதுச்செயலாளர் வாழையூர் குணா தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் திடீரென தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புகைப்படங்கள் மற்றும் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து வாழையூர் குணா நிருபர்களிடம் கூறுகையில்:- கடந்த 23ஆம் தேதி தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இன்றைய தேவை திராவிட மாடலா, தேசிய மாடலா என்ற ஒரு விவாதம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தேசிய மாடல் என்ற தலைப்பில் கிருஷ்ணசாமி கலந்து கொண்டு பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்ட திராவிட மாடலை சேர்ந்த ரவுடிகள் கைது செய்யும் வரையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அதனை வலியுறுத்தி இன்று ஸ்டாலினுடைய உருவ பொம்மையை எரித்து புதிய தமிழகம் கண்டனத்தை பதிவு செய்து உள்ளோம் என தெரிவித்தார்.

 

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த உறையூர் காவல்நி நிலைய போலீசார் முதல்வரின் உருவப் பொம்மையை எரித்து சாலை மறியலில் ஈடுபட்ட புதிய தமிழகம் கட்சியினரை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.