நகராட்சி, பேரூராட்சிகளில் தலைவர் பதவிகளை முஸ்லீம்களுக்கு வழங்கி உரிய அங்கீகாரம் அளித்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

தமிழகத்தில் நடந்து முடிந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தலில் திமுக கழக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் 8 மாத கால நாடு போற்றும் நல்லாட்சி புகழ் மிக்க பொற்கால ஆட்சிக்கு ஆதரவாக தமிழக மக்கள் மகத்தான வெற்றியை தேடித் தந்தார்கள். அப்படி வெற்றி பெற்றவர்களில் 138 நகராட்சிகளில் இஸ்லாமிய சமுதாயத்திற்கு கீழ்கண்ட 13 நகராட்சி தலைவர்களையும் , 24 பேருராட்சி தலைவர்களையும் அறிவித்துள்ளதை முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பில் பராட்டுகிறேன் . நகராட்சி தலைவர்களாக 1.மேலூர் – முஹம்மது யாசீன்.2.மேல்விஷாரம் – ST முஹம்மது அமீன்.3.இராமேஷ்வரம் -நாசர்கான் , 4.ஆம்பூர் – ஏஜியாஸ் அஹமத்.5.வந்தவாசி – ஜலால். 6.அதிராம்பட்டிணம் தாஹிரா அம்மாள்.7.மதுக்கரை- நூர்ஜஹான். 8.கீழக்கரை -செஹானஸ் ஆபீதா . 9.கடையநல்லூர் – ஹபீப்ரஹ்மான் . 10.தென்காசி -சாதீர். 11.காயல்ப் பட்டிணம் -முத்துமுஹம்மது .12 . பள்ளப்பட்டி – முனைவர் ஜான். 13.மேட்டுப்பா ளையம் – மெஹரிபா ஆகியோரையும் , பேரூராட்சி மன்ற தலைவர்களாக | ஆர் எஸ் . மங்களம் – மௌசூரியா பானு 2.அபிராமம் பாத்திமா கனி3.முதுகுளத்தூர் – ஷாஜகான்.4.புது வயல் – முஹம்மது மீரான்.5.இளையான்குடி செய்யது ஜமிமா. 6.ஏர்வாடி தஸ்லிமா இப்ராஹிம் 7.வடகரை கீழ்படுகை – சேக்தாவுத் வாசுதேவன் நல்லூர் – லைலாபானு ஆத்தூர் – கமாலுதீன் , 10.உடன் குடி – ஹமைராபாத்திமா 11.திருவிதாங்கோடு ஹாருண்ரஷித் | 2 முத்துப் பேட்டை மும்தாஜ் பேகம் 13.லெப்பைகுடிகாடு ஹிர்உசேன் 14.அன்னவாசல் மதினா பேகம் , 15.ஊத்தங்கரை -அமானுல்லா 16.மதுக்கூர் – வகிதா பேகம்17.கங்கை கொண்டான் பரிதா அப்பாள் 18.செஞ்சி – முக்தியார் அலி மஸ்தான். 19.விக்கிரவாண்டி அப்துல் சலாம் 20 . செங்கம் சாதிக் பாட்ஷா 21.ஊத்துகோட்டை அப்துல் மஜித்22.சித்தையன் கோட்டை போதும்பொண்ணு 23 . நத்தம் சேக் சிக்கந்தர் 24 , உத்தமபாளையம் – அப்துல் முஹம்மது காசிம் உள்ளிட்டவர்களை அறிவித்து நகராட்சியில் சுமார் 10 சதவீதத்தையும் , பேரூராட்சியில் 5 சதவீதத்தையும் வழங்கி இஸ்லாமிய சமுதாயத்திற்கு உரிய பிரதிநிதிதுவத்தை வழங்கிய சிறுபான்மை சமுதாய பாதுகாவலர் தமிழக முதலமைச்சருக்கு நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்