தமிழ் தேசிய கட்சி மாநில மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் திருச்சி அருண் ஓட்டலில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் தமிழ்நேசன் தலைமை தாங்கினார். திருச்சி மாவட்ட செயலாளர் ராஜா வரவேற்புரையாற்றிட மாநில பொதுச் செயலாளர் முல்லைநாதன் பொருளாளர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:-
தமிழகத்தில் தொடர்ச்சியாக தமிழர்கள் தாக்கப்பட்டு வருகின்றனர். கர்நாடகா திட்டமிட்டு மேட்டூரில் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள் திருப்பூரில் தமிழர்கள் விரட்டப்பட்டு தாக்கப்பட்டுள்ளனர். வெளிமாநிலத்தவர்கள் தமிழ்நாடு முழுவதும் நகர மற்றும் கிராமத்தில் மொத்த மொத்தமாக ஊடுருவி வருகிறார்கள். மேலும் கடந்த சில மாதங்களாக வெளி மாநிலத்தவர்கள் கொலை கொள்ளை மற்றும் கற்பழிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக வெளி மாநிலங்களில் மண்ணின் மைந்தர்களுக்கு வேலை என சட்டம் உள்ளது அதேபோல தமிழகத்திலும் தமிழர்களுக்கே வேலை என வருகிற சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.