தமிழ்த்தேச மக்கள் கட்சி சார்பில் தமிழர் தொழில் காப்பு மாநாடு திருச்சி தென்னூர் உழவர் சந்தை திடலில் நடைபெற்றது. இந்த தமிழர் தொழில் காப்பு மாநாட்டில் தலைமை நிலைய செயலாளர் மன்னர் வரவேற்புரை ஆற்றிட துணைப் பொதுச் செயலாளர் காலை தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் முத்து முன்னிலை வகித்தார்.
முன்னதாக தமிழர் தொழில் காப்பு மாநாட்டின் கொடியை ஏற்றி வைத்து தலைவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது. மாநாட்டில் சிறப்புரை ஆற்றிட தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைவர் மணியரசன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மற்றும் தமிழர் கட்சி தலைவர் புகழேந்தி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
மாநாட்டில் தமிழ் தேச மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் தமிழ் நேயன் நிறைவு உரையாற்றினார். இந்த தமிழர் தொழில் பாதுகாப்பு மாநாட்டில் தமிழ் தேச மக்கள் கட்சியின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்