தமிழ்நாடு அமைச்சுர் கிராப்பிலிங் ஸ்போர்ட்ஸ் அசோசியேசன் சார்பில் 14-வது மாநில அளவிலான கிராப்பிலிங் போட்டி திருச்சியில் நடைபெற்றது. இந்தப் போட்டியினை அமைச்சுர் கிராப்பிலிங் தமிழ்நாடு மாநிலத் தலைவர் Dr.ராஜேந்திரன் IAS போட்டியினை தலைமை ஏற்றார். மாநிலத் சீனியர் துணைத் தலைவர் பொன் பாலகணபதி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக மாநிலத் துணைத் தலைவர் கணேசன் Ret.DSP மற்றும் மாநிலத் துணைத் தலைவர் Magician அடைக்கல ராஜா இப் போட்டியினை துவக்கி வைத்தனர்.

உலக விக்டர வீரக்குறிச்சி சிலம்பத்தின் தலைவர் Dr.ராமச்சந்திரன் வீரர், வீராங்கனைகளுக்கு வாழ்த்துக் கூறினார். அமைச்சுர் கிராப்பிலிங் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் மகாகுரு விக்டர் குழந்தை ராஜ் இந்தப் போட்டியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.இந்தப் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் முதல் மூன்று இடங்களை ராமநாதபுரம் மாவட்டம் தூத்துக்குடி மாவட்டம் மற்றும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அணிகள் தட்டிச் சென்றனர்.

 

இந்தப் போட்டியில் முதல் இரண்டு இடங்கள் பிடித்த வீரர் வீராங்கனைகள் . டிசம்பர் மாதம் 24 25 26 மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் நடைபெற உள்ள தேசிய அளவிலான கிராப்பிலிங் போட்டியில் கலந்து கொள்வார்கள். இதில் 20 மாவட்டத்திலிருந்து 200-க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள்கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.