தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய இயன்முறை மருத்துவர்கள் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய ஆலோசனை மற்றும் கலந்தாய்வுக் கூட்டம் திருச்சியில் நடந்தது.தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய இயன் முறை மருத்துவர்கள் சங்க மாநில தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஏராளமான கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சங்கத்தின் தலைவர் ராதாகிருஷ்ணன் கூறும்போது.

இக்கூட்டத்தில்.., தகுதிக்கேற்ப ஊதியம் வழங்க வேண்டும். THE NATIONAL COMMISSION FOR ALLIED AND HEALTHCARE Professional Act 2021 -யை தமிழகம் முழுவதும் அமல்படுத்த வேண்டும். ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு அனைத்து மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மகளிர் இயன்முறை மருத்துவர்களுக்கும் அளித்து, அதற்கான ஆணையை தமிழக அரசு வெளியிட வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானங்களை நிறைவேற்றாத நிலையில் வருகின்ற தேர்தலை புறக்கணிக்கிறோம். தொடர்ந்து கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால் தங்களது குடியுரிமையை நிராகரிப்போம். எங்களது துறையை சார்ந்த 50 ஆயிரம் குடும்பங்கள் தேர்தலை புறக்கணிக்கிறோம் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *