தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரி இணைந்து 31 வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு கல்லூரி வளாகத்தில் உள்ள மூக்கப்பிள்ளை அரங்கத்தில் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் நடைபெற்றது. மாநாட்டிற்கு வரவேற்பு குழு தலைவர் சிவ.வெங்கடேஷ் தலைமை தாங்கினார் . கிழக்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் முனைவர் அ.அருண்விவேக், வரவேற்றார். கல்லூரி நிர்வாகக் குழு உறுப்பினர் சியாமளா ரவிச்சந்திரன் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் குத்து விளக்கேற்றி மாநாட்டை தொடங்கி வைத்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர் முனைவர் வெ.சுகுமாறன் அறிமுக உரையாற்றினார்.

அறிவியல் இயக்கத்தின் சிறப்பு மற்றும் அறிவியலால் நாம் அடையும் பயன்கள் குறித்து கல்லூரி தலைவர் பொன்.பாலசுப்பிரமணியன், கல்லூரி செயலர் பொன்.ரவிச்சந்திரன்; ஆகியோர் பேசினர். மனித ஆயுளின் ரகசியம், அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு, சமூகம் மேல்நோக்கி செல்வதில் அறிவியலின் பங்கு குறித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில துணைத்தலைவர் கவிஞர் நந்தலாலா பேசினார். திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணை வேந்தர் கிருஷ்ணன் பேசினார்.   ஆசிரியர்களுக்கான அமர்வில் கவிஞர் இரா.எட்வின், ஆசிரியர் மாதவன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். மந்திரமா தந்திரமா நிகழ்ச்சியை மாநில செயலாளர் முனைவர் S.R சேதுராமன் செய்து காண்பித்தார். கல்லூரி முதல்வர் அ.வெங்கடேசன், துணை முதல்வர் முனைவர் மு.வு.தமிழ்மணி, கல்லூரி ஒருங்கிணைப்பாளர் முனைவர் மு.மீனாட்சிசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை இயற்பியல் துறை பேராசிரியர் பொ.ரமேஷ் செய்திருந்தார். தமிழ் ஆய்வுத்துறை, பேராசிரியர் ஆ.மாணிக்கத்தாய், மாநில துணைத்தலைவர் சி.பிரபாகரன் ஆகியோர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர். முடிவில் மாவட்ட இணை செயலாளர் ஹரிபாஸ்கர் நன்றி கூறினார்.  மாநாட்டின் இரண்டாம் நாளான ஞாயிறு அன்று நடைபெற்ற விஞ்ஞானிகள் சந்திப்பு அமர்வுக்கு மாநில செயலர் முகமது பாதுஷா தலைமை வகித்தார். இதில் இந்திய அரசின் விஞ்ஞான் பிரச்சார் நிறுவனத்தின் முதுநிலை விஞ்ஞானி முனைவர் த.வி. வெங்கடேஸ்வரன் உடன் மாநிலம் முழுவதும் இருந்து வந்திருந்த 400 குழந்தை விஞ்ஞானிகள் கலந்துரையாடினர். இதில் குழந்தை விஞ்ஞானிகள் எழுப்பிய கேள்விகளுக்கு முனைவர் த. வெங்கடேஸ்வரன், முனைவர் சு.ஏ. வந்தனா இருவரும் பதிலளித்தனர். நிறைவு விழாற்கு மாநில பொருளாளர் ஜீவானந்தம் தலைமை தாங்க, விழா நிகழ்ச்சிகளை மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.

மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட அறிவியல் குறித்த ஆய்வுக்கட்டுரைகளில் தேர்வு செய்யப்பட்ட (30 குழுக்களுக்கு) 60 இளம் விஞ்ஞானிகளுக்கு துறையூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எஸ்.ஸ்டாலின் குமார் பரிசளித்து பாராட்டினார். விழாவில் கல்லூரித் தலைவர் பொன் .பாலசுப்ரமணியன் , NCSC மாநில ஒருங்கிணைப்பாளர் வெ சுகுமாரன்,வழக்கறிஞர் முத்துகுமார் , அறிவியல் இயக்க மேனாள் தலைவர் C. ராமலிங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில பொதுச்செயலாளர் சுப்ரமணி நிறைவுரை ஆற்றினார். முடிவில் மாவட்ட செயலாளர் மணிகண்டன் நன்றி கூறினார் . இவ் விழாவில் மண்டல ஒருங்கிணைப்பாளர் ஸ்டீஃபன் நாதன், முகமது பாதுஷா, சசிகுமார் , கோபிநாத், அருண் விவேக், தியாகு , சீத்தா , L. முருகன், எஸ்.நடராஜன், பாலுசாமி, பேரா.சலாகுத்தீன், சாந்தி உள்ளிட்ட மாநில, மாவட்ட , ஏராளமான அறிவியல் இயக்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *