தமிழ்நாடு ஓய்வு பெற்ற கால்நடை ஆய்வாளர் சங்கத்தின் 20-வது மாநில பேரவை கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஆனந்தா ஹோட்டல் கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. இந்த மாநில பேரவை கூட்டத்திற்கு மாநில தலைவர் சின்னசாமி தலைமை தாங்கினார் மாநில துணைத்தலைவர் முருகேசன், மாநில இணைச்செயலாளர் அருள் தாஸ் துணைத் தலைவர் முத்து சுப்பையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆண்டு அறிக்கையை மாநில செயலாளர் ஆறுமுகம் வாசிக்க வரவு செலவு அறிக்கையை மாநில பொருளாளர் அப்துல் வெளியிட்டார். இந்த கூட்டத்தில் கால்நடை ஆய்வாளர்களாக பணியாற்றி 75 முதல் 80 வயது நிரம்பியவர்களுக்கு மற்றும் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த மாநில பேரவை கூட்டத்தில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற கால்நடை ஆய்வாளர் சங்கத்தின் உறுப்பினர்கள் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.