தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் 3552 பணியிடங்களுக்கான இரண்டாம் நிலை காவலர் ( ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக்காவல் படை ) , தீயணைப்புத்துறை மற்றும் இரண்டாம் நிலை சிறைக் காவலர்களுக்கான காவலர் தேர்வு -2022 இன்று ( 27.11.22 ) திருச்சி மாநகரில் உள்ள 16 தேர்வு மையங்களில் நடைபெற்றது .

இந்த தேர்வானது பகுதி – 1 தமிழ்மொழி தகுதித்தேர்வு 80 மதிப்பெண்களுக்கும் , பகுதி -2 முதன்மை எழுத்துத்தேர்வு 70 மதிப்பெண்களுக்கும் என இரண்டு பகுதிகளாக நடைபெற்றது . இத்தேர்வு நடைபெற்ற மையங்களான ஜமால்முகமது கல்லூரி , சமது மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி , அய்மான் பெண்கள் கல்லூரி ,

ஆக்ஸ்போர்டு கல்லூரி , ஜேம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி , வெஸ்டிரி மேல்நிலைப்பள்ளி , நேஷனல் கல்லூரி , காவேரி கல்லூரி , ஜோசப் மேல்நிலைப்பள்ளி , மற்றும் கேம்பியன் மேல்நிலைப்பள்ளி ஆகிய தேர்வு மையங்களில் நடைபெற்ற காவலர் தேர்வினை திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *