தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் அவசர கூட்டமானது திருச்சி உள்ள ரவி மினி ஹாலில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் ஜோசப் தன்ராஜ் வரவேற்றார். இந்த கூட்டத்திற்கு மாநில பொதுச் செயலாளரும் அகில இந்திய ஆசிரியர் கூட்டணி இணைப் பொதுச் செயலாளருமான ரெங்கராஜன் தலைமை ஏற்றார்.

 திருவாரூர் மாவட்ட செயலாளர் ஈவேரா, பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், சென்னை மாநகராட்சி செல்வகுமார் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருச்சிராப்பள்ளி மாவட்ட கிளை கலைக்கப்பட்டு புதிய அமைப்பு குழு பொறுப்பாளராக மாவட்ட தலைவராக ஜி முரளி, மாவட்ட செயலாளராக செல்வகுமார், மாவட்ட பொருளாளராக விவேகானந்தன் நியமிக்கப் பட்டார்கள். இவர்களுக்கு வழி காட்டுவதற்காக வழிகாட்டுதல் குழு உருவாக்கப்பட்டு அந்த குழுவில் ஆல்பர்ட் சகாயராஜ், சுப்பிரமணியன், பத்மநாபன் நியமிக்கப்பட்டார்கள்.

இந்த கூட்டத்தில் இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். பங்களிப்பு ஓய்வூதியம் இரத்து செய்ய வேண்டும் போன்ற தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இறுதியாக செல்வகுமார் நன்றியுரை ஆற்ற இந்தக் கூட்டமானது இனிதே நிறைவுற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *