தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் மாநாடு திருச்சி மாவட்ட தலைவர் சரவணன் தலைமையில் திருச்சி தனியார் ஹோட்டல் கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு மாநில துணைத்தலைவர் செல்லசாமி முன்னிலை வகித்தார். இந்த மாநாட்டில் மாநில தலைவர் சண்முகராஜா சிறப்புரையாற்றினார். முன்னதாக மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் மாநில மாவட்ட நிர்வாகிகளை வரவேற்று பேசினார். இந்த மாநாட்டின் கோரிக்கைகளாக :-

41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்திட கோரியும், இறந்த சாலை பணியாளர்கள் 300க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வாரிசு வேலை வழங்கக் கோரியும், 5000-க்கும் மேற்பட்ட சாலை பணியாளர் காலிப் பணியிடங்களை நிரப்பி வேலையில்லாத இளைஞர்களுக்கு அரசுத் துறையில் வேலை வழங்கக் கோரியும்,

அரசு பணியிடங்களை ஒழித்திட வகைசெய்யும் வகையில் கடந்த கால அதிமுக அரசு அமைத்த பணியாளர் சீரமைப்பு குழுவை கலைத்திடுக அரசாணை 56-ஐ ரத்து செய்யக் கோரியும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்திட கோரியும், புதிதாக அறிவிக்கப்பட்ட மாநகராட்சி வேலூர் ஈரோடு திருப்பூர் திண்டுக்கல் தஞ்சாவூர் தூத்துக்குடி பகுதிகளில் பணியாற்றும் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் மாநகர ஈட்டுப்படி வழங்க கோரியும், 1991, 2001, 2011 என மூன்று முறை நடைபெற்ற அதிமுக ஆட்சி காலங்களில் மூன்று முறை டிஸ்மிஸ் செய்யப்பட்டது. 13,500 மக்கள் நலப் பணியாளர்களுக்கு பணி வழங்கிட கோரியும், புதிய பணி நியமனங்களில் மக்கள் நலப்பணியாளர் குடும்பத்தில் ஒருவருக்கு கட்டாயம் அரசு பணி வழங்குவது தமிழக அரசு உறுதி செய்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருச்சியில் நடைபெற்ற மாநில நிர்வாகிகள் மாநாட்டில் தஞ்சாவூர், புதுக்கோட்டை, கரூர், மதுரை, விழுப்புரம், சென்னை, திருச்சி, முசிறி, துறையூர், உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மாவட்ட மாநில நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.