தமிழ்நாடு பள்ளிக் கல்வி நேரடி நியமன ஆய்வக உதவியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் மாநில தலைவர் சிவலிங்கம் தலைமையில் திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுச்செயலாளர் தளபதி, பொருளாளர் கவியரசு, மகளிர் அணி தலைவி சாந்தி, மாநில துணைத் தலைவர்கள் ராஜ கணேஷ், மாநில ஒருங்கிணைப்பாளர் முத்துவடிவேல், லட்சுமணன், மாநில துணை செயலாளர் முத்துக்குமார், பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கடந்த 28.04.2022 அன்று ஆய்வக உதவியாளர்களுக்கு பணி வரையறை வழங்க யமைக்கும்,. வருவாய் மாவட்டத்திற்குள் கலந்தாய்வு நடத்தியதற்கும், 2.2.2024 அன்று திருத்திய பணி வரையறையை வழங்கிய வைக்கும். 04.03. 2024 அன்று தமிழ்நாடுகல்வியியல் மற்றும் பயிற்சி நிறுவனம் சார்ந்த ஆய்வக உதவியாளர்களுக்கு 18.03. 2024 முதல் பயிற்சி வழங்க உள்ளமைக்கும்,

11.03.2024 அன்று ஆய்வக உதவியாளர்கள் ஆய்வகத்தில் மட்டும் பணிபுரியும் வகையில் கால அட்டவணை வழங்கியதற்கும், தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்வது என்று பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *