தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில பொறுப்பாளரும், திருச்சி மேற்கு மற்றும் கிழக்கு மாவட்ட பொறுப்பாளருமான ஷபியுல்லாகான் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி திருச்சி மாவட்டத்தில் தற்போது தெற்கு மாவட்டம் வடக்கு மாவட்டம் என இரு மாவட்ட நிர்வாங்களாக செயல்பட்டு வருகிறது . இதனை நிர்வாக வசதிக்காக சீரமைக்கும் விதமாக கடந்த தலைமை நிர்வாக குழு எடுத்த முடிவின் அடிப்படையில் தெற்கு மாவட்டம் , வடக்கு மாவட்டம் என செயல்பட்ட நிர்வாகம் இனி கிழக்கு மாவட்டம் , மேற்கு மாவட்டம் என செயல்படும் . திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒன்பது சட்ட மன்ற தொகுதிகளில் திருச்சி மேற்கு , திருவரங்கம் , மணப்பாறை , முசிறி ஆகிய சட்டமன்ற தொகுதிகள் மேற்கு மாவட்டமாகவும் , இதேபோல் திருச்சி கிழக்கு , திருவெறும்பூர் , லால்குடி , மண்ணச்சநல்லூர் , துறையூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய பகுதிகள் திருச்சி கிழக்கு மாவட்டமாகவும் இனி செயல்படும் .

திருச்சி மேற்கு மாவட்ட பொறுப்பு குழு தலைவராக பைஸ் அகமது ( மாமன்ற உறுப்பினர் ) , திருச்சி கிழக்கு மாவட்ட பொறுப்பு குழு தலைவராக முகமது ராஜா ஆகியோர் நியமிக்கப் பட்டுள்ளனர் . இப்ராஹிம் , இப்ராம்ஷா , ஹுமாயூன் கபீர் , இம்ரான் , அசாருதீன் , மணவை அக்பர் மேற்கு மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்களாகவும் , அஷ்ரப் அலி , காஜா மொய்தீன் , உஸ்மான் , இலால்குடி இலியாஸ் , மண்ணச்சநல்லூர் மாலிக் , துறையூர் அப்துல்லா கிழக்கு மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்களாகவும் தலைமை கழகத்தால் நியமிக்கபடுகிறார்கள் . எனவே கழக உறுப்பினர்கள் இவர்களோடு இணைந்து கழக பணிகளை மேற்கொள்ளும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *