தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புடன் இணைக்கப்பட்ட திருச்சி மாவட்ட நகை அடகு பிடிப்போர் கூட்டமைப்பின் நிர்வாகிகளின் செயற்குழு கூட்டம் திருச்சி பழைய பால்பண்ணை புதிய வெங்காய மண்டி கூட்ட அரங்கத்தில் இன்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அன்பழகன் வரவேற்புரையாற்றிட, நகை அடகு பிடிப்போர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் காசி விஸ்வநாதன் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல தலைவர் தமிழ்ச்செல்வம் சிறப்புரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில். 

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு ஆகியோர் தலைமையில் வருகிற அக்டோபர் 10ஆம் தேதி திருச்சி மாவட்ட நகை அடகு பிடிப்போர் கூட்டமைப்பு திருச்சி மாவட்டத்தில் உதயமாகிறது.. திருச்சி மாவட்டத்தில் அடகு கடை தொழில் செய்பவர்கள், வணிகர்கள் காவல்துறையால் மிகவும் அச்சுறுத்த படுகிறார்கள். குறிப்பாக காவல்துறையினர் திருடர்களை சங்கிலியால் பிணைத்து நகைக் கடைக்கு அழைத்து வந்து எங்கள் மீது பொய் வழக்குகள் போடுகிறார்கள். அதேபோல் வருவாய்த்துறை அதிகாரிகள் தாசில்தார் ஆகியோர் எங்களுக்கு லைசன்ஸ் புதுப்பிப்பது இல்லை, மேலும் சமூக விரோதிகள் எங்களை அச்சுறுத்துகிறார்கள். தற்போது மணப்பாறையில் லைசென்ஸ் புதுப்பிக்க படவில்லை அதேபோல் ஏலத்தில் அனுமதி அளிக்கவில்லை இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க உள்ளோம். இது போன்ற காரணத்தினால் திருச்சி மாவட்ட நகை அடகு பிடிப்போர் கூட்டமைப்பு திருச்சியில் உதயமாகிறது. இந்தக் கூட்டத்தில் 2,000 மேற்பட்டோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.