தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜ் தலைமையில் திருச்சி என்எஸ்பி ரோடு, சிங்காரத்தோப்பு, பெரியகடை வீதி, சின்ன கடைவீதி, நந்திகோவில் தெரு, தேரடி கடைவீதி பகுதிகளில் உள்ள வணிகர்கள் இன்று மாலை திருச்சி மாநகராட்சி ஆணையர் சரவணனை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் தீபாவளி பண்டிகை நெருங்கும் பட்சத்தில், மேலே குறிப்பிட்ட பகுதிகளில் பெரிய வணிக நிறுவனங்களுக்கு முன்பு தரைக்கடைகள் அமைத்து, வணிக நிறுவனங்களுக்கும் பொதுமக்களுக்கும் மற்றும் பெரும் இன்னல்களை ஏற்படுத்தி வருவதாகவும், ஏற்கனவே ஆன்லைன் வர்த்தகத்தால் வியாபாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தரைக்கடை வியாபாரத்தின் மூலம் கடைக்கு ஆட்கள் வருவது குறைந்துள்ளதாகவும் எனவே திருச்சிராப்பள்ளி மாநகராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறை இணைந்து உரிய தீர்வுகாண வேண்டுமாய் குறிப்பிட்டுள்ளனர்.

செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் தரைக்கடை மற்றும் சிறுவியாபாரிகள் எங்கு வேண்டுமானாலும் வியாபாரம் செய்யட்டும், வணிகர் சங்கத்திற்கு எந்தஒரு பாகுபாடும் இல்லை. அதேநேரம், தெப்பக்குளத்தை சுற்றிலும் கடைகள் ஆக்கிரமித்துள்ளதால் மலைக்கோட்டை மற்றும் தெப்பக்குளத்தின் அழகு சீர்கெட்டுள்ளது என்றும், ரோப்கார் மற்றும் நீர்வீழ்ச்சி போன்ற அரசின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தவும், பஜார் பகுதிகளில் வந்து செல்லும் பொதுமக்கள் வசதிக்குஏற்ப வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்தி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்ததாகவும் அதனை மாநகராட்சி ஆணையர் பணிவுடன் பரிசளித்து ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியை அளித்து இருப்பதாகவும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்