தமிழ்நாடு ஸ்டேட் மார்க்கெட்டிங் நிரந்தர பணியாளர்கள் சங்கத்தின் 5 ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஹோட்டல் தமிழ்நாடு ஹோட்டல் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் இளம்வழுதி கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார் . மேலும் பொது செயலாளர் சரவணன் கடந்த ஆண்டு சங்கத்தின் பணி குறித்து விளக்கம் அளித்தார். பொருளாளர் மோகன் பாபு கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டார்.

அதனைத் தொடர்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களாக:-உதவியாளர் பணி நிலைக்கு பதவி உயர்வு வழங்கிட வேண்டும் , கொடைப் பணிக்காலம் 16 வருடத்தினை நமது பணிப் பதிவேட்டில் பதிவு செய்து அதற்குரிய பணப்பலன்கள் மற்றும் பதவி உயர்வு வழங்கிட வேண்டும், பணியிட மாறுதல் குறித்து வழிகாட்டி நெறிமுறைகள் உருவாக்கி, அமலாக்க வேண்டும், காலிப்பணியிடங்கள் நிரப்ப கோரியும், விடுமுறை நாட்களில பணிபுரிதல் மற்றும் மிகைப் மணிநேரம் பணி செய்தலுக்கு வழங்கிடும் தொகையினை உயர்த்தி வழங்க கோருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பொதுக்குழுவில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர் அதன்படி தலைவராக கண்ணன், பொதுச் செயலாளராக பூபாலன், பொருளாளராக மோகன்பாபு, இணைச் செயலாளராக கார்த்திகேயன், ஒருங்கிணைப்பாளராக சிவகுமார், துணை தலைவர்களாக சரவணன் விஜய் அண்ணாதுரை ரெங்கசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்