திருச்சி ரயில்வே ஜங்சன் எதிரில் காதிகிராப்ட் அலுவலகம் முன்பு திருச்சி மத்திய, வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி, மாணவர் அணி, மருத்துவ அணிகளின் சார்பில் நீட் தேர்வினை ரத்து செய்ய மறுக்கும் ஒன்றிய அரசையும், மாநில ஆளுநரையும் கண்டித்து மாபெரும் உண்ணாவிரத அறப்போரட்டம் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது.
இந்த அறப்போரட்டத்தை மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன், மாநகர செயலாளர் அன்பழகன், கிழக்கு மாநகர செயலாளர் மதிவாணன் ஆகியோர் துவக்கி வைத்தனர். மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இந்த உண்ணாவிரத அறப்போரட்டத்தில் மாவட்ட மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக, இளைஞரணி, மாணவரணி, மருத்துவ அணிகளின் நிர்வாகிகள்,கழக நிர்வாகிகள் உட்பட 300க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும் உண்ணாவிரத போராட்டத்தில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த், மாநில மாணவரணி துணை அமைப்பாளர் பி எம்.ஆனந்த்,மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் கண்ணன்,மாநில பொறியாளர் அணி எஸ்.கே.பி கருணாநிதி, சட்டமன்ற உறுப்பினர்கள் கதிரவன், ஸ்டாலின் குமார், பழனியாண்டி, மற்றும் ஒன்றிய செயலாளர்கள் மண்டல குழு தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மேலும் தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு, பள்ளிகல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் கலந்துகொண்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஜூஸ் கொடுத்து உண்ணாவிரத்தை முடித்து வைத்தார்.
நகராட்சி நிர்வாகதுறை அமைச்சர் கே.என்.நேரு பேசியது..தமிழ்நாட்டில் நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் அதிலிருந்து விளக்கு அளிக்க வேண்டும் என தொடர்ந்து திமுக அரசு பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது. தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மட்டும் அல்லாமல் அமைச்சர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து மனுக்களும் கொடுக்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஆனால் ஆளுநர் எதற்கும் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பிலே போட்டுவிட்டார் . தமிழக ஆளுநர் ஆளுங்கட்சிக்கு எதிராகவும் எதிர்க்கட்சிக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகிறார். எத்தனை வழக்குகள் தொடர்ந்தாலும் எதற்கும் அஞ்சாமல் தமிழக மக்களுக்காக நமது முதலமைச்சர் போராடி வருகிறார். மத்தியில் திமுக கூட்டணி, இந்திய கூட்டணி ஆட்சியை கைப்பற்றினால் தமிழ்நாட்டில் நிச்சயமாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றார்.