திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதியில் தமிழ் குரல் அறக்கட்டளை சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் விபத்தை தவிர்த்து சாலை விதிகளை மதித்து வாகன பயணத்தை மேற்கொள்ள வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது இந்நிகழ்வில் தன்னார்லரும் ஒய்வு பெற்ற ரயில்வே ஊழியரும் சித்த வைதியருமான ஸ்ரீனிவாசபிரசாத் அவர்கள் தெர்மோகோல் அட்டையில் செய்யப்பட்ட (எமன்)எருமை மாடு போன்ற தோற்றத்தில் செய்யப்பட்ட சட்டையை அணிந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

 இந்த சட்டையில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது  இவ் விழிப்புணர்வு நிகழ்வில் தமிழ் குரல் அறக்கட்டளை அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைவர் திருமதி தங்கமணி அவர்கள் தலைமை தாங்கினார் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மகேஷ் நிர்வாக குழு உறுப்பினர் லிவிங்ஸ்டன் தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக விவேகானந்தா யோகாலயாவின் நிர்வாகி யோகா பயிற்ச்சி ஆசிரியர் ஸ்ரீதர் மாற்றம் அமைப்பின் நிறுவனரும் தேசிய விருது பெற்ற குறும்படத்தின் நடிகருமான ஆர். ஏ. தாமஸ் ஸ்ரீரங்கம் மக்கள் நல சங்கத்தின் தலைவருமான மோகன்ராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு

 மாற்றம் அமைப்பின் சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டறிக்கையை வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினர் இவ் விழிப்புணர்வு பணியில் சமூக ஆர்வலர் களுடன் ஸ்ரீரங்கம் போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் ஆதி ராஜூ தலைமை காவலர் ரபிக் மற்றும் காவலர்கள் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர் இவ் விழிப்புணர்வு நிகழ்வில் போது சாலையில் தலை கவசம் அணியாமல் வாகனம் ஓட்டிய பெண்கள் மற்றும் ஆண்கள் விழிப்புணர்வு துண்டறிக்கையை பெற்று கொண்டு அதை படித்து இனி தலை கவசம் அணியாமல் வாகனம் ஓட்ட மாட்டோம் என்றும் வாகனம் ஓட்டும்போது தொலைபேசி பேச மாட்டோம் என்று உறுதி அளித்து தலை கவசத்தை அணிந்து கொண்டு வாகனத்தில் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *