உலகப் புத்தக தினத்தை முன்னிட்டு தில்லை நகர் டுவெலைட் நடனப் பள்ளியில் அமைந்துள்ள அறிவுக்கடல் அண்ணல் அம்பேத்கர் நூலகத்தில் தமுஎகச திருச்சி மாவட்ட திரைக் கலைஞர்கள் கிளை சார்பில் வாசிப்பு இயக்கம் நடைபெற்றது. இதில் . எழுத்தாளர் சீத்தா எழுதிய ராசாத்தி நூல் குறித்த ஆய்வு மற்றும் வாசிப்பு இயக்கம் நடந்தது .

நிகழ்ச்சிக்கு கிளைச் செயலாளர் லாரன்ஸ் லூக் தலைமை தாங்கினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க திருச்சி மாவட்டத் தலைவர் சிவ.வெங்கடேஷ் வாசிப்பு இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

தேசியக் கல்லூரி மேனாள் முதல்வர் சிவ. ராமமூர்த்தியின்75 ஆவது பிறந்த நாளையொட்டி 75 நூல்கள் வழங்குவது என்கிற அடிப்படையில் முதல் கட்டமாக 35 நூல்கள் வழங்கப்பட்டன.

அதனை நடனப் பள்ளி நிறுவனர் விமலா பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் கிளை பொருளாளர் சந்துரு, மைக்கேல், நிரஞ்சன், அபிஷேக், லலிதா, வல்லரசு உட்பட திரைக் கலைஞர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கார்த்திக் வரவேற்றார். முடிவில் கிளை ஊடகப் பொறுப்பாளர் விஜய்வர்மா நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *