தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் கண்ணியத்தை குலைக்கும் வகையிலும் அமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்பட்டதாக, பொதுக்குழுவின் ஒழுங்கு நடவடிக்கை மூலம் ஹைதர் அலி மற்றும் அவர் சார்ந்த நபர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். மேலும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் பெயரையும் கொடியையும் பயன்படுத்தக் கூடாது என்று உயர் நீதிமன்ற உத்தரவை மீறி, தொடர்ந்து நேர்மையற்ற முறையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சொத்துகளை அபகரிக்க முயற்சி செய்யும் எண்ணத்தில் செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக அமைப்பின் பெயரில் போலியாக வசூல் செய்தும் பொதுமக்களிடம் ஆள்மாறாட்டம் செய்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பெயரையும் கொடியையும் ஹைதர் அலி மற்றும் அவரை சார்ந்தவர்கள் தவறாக பயன்படுத்தி வருகின்றனர். இதை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் ராஜா முகமது தலைமையில் திருச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று புகார் அளிக்க வந்தனர். இதில் மாவட்ட செயலாளர் இப்ராஹிம் மனிதநேய மக்கள் கட்சியின் செயலாளர் பைஸ் அகமது, பொருளாளர் அஷ்ரப் அலி உள்ளிட்ட மாவட்ட துணை அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்