முஸ்லிம்களின் உயிரினும் மேலான முகமது நபி அவர்களை பற்றி தொலைகாட்சி விவாதத்தில் அவதூறு கருத்துகளை தெரிவித்து உலக அரங்கில் இந்திய நாட்டின் மீது இருக்கும் நன்மதிப்பை குறைக்கும் வகையில் செயல்பட்ட பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோரை பயங்கரவாத தடுப்பு (UAPA) சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி தமுமுக சார்பாக தமிழகம் முழுவதும் வருகிற 10-ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி பாலக்கரை ரவுண்டானா அருகில் நாளை வெள்ளிகிழமை மாலை 04.00 மணியளவில் திருச்சி மாவட்ட தமுமுக தலைவர் முகமது ராஜா தலைமையில் நடைபெறும்‌

போராட்டத்தில் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினரும் மமக பொதுசெயலாருமான ப.அப்துல் சமது MLA கண்டன உரையாற்றுகிறார். மேலும் திரிமுனால் காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநில பொது செயலாளர் துரை தமிழரசு, மமக மாவட்ட செயலாளர் பைஸ் அகமது MC மற்றும் மாவட்ட செயலாளர் முகம்மது இப்ராஹிம் ஆகியோர் உரையாற்றுகிறார்கள்.

இந்த ஆர்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், துணை மற்றும் அணிகளின் நிர்வாகிகள், நகர ஒன்றிய போரூர் கழக நிர்வாகிகள், தோழமை கட்சிகளின் பிரதிநிதிகள், சமூக நல ஆர்வலர்கள், ஜமாத்தார்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என த மு மு க வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்