திருச்சி கோட்டை காவல் சரகம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன். இவருக்கு அமர்நாத் (வயது 28) ரகுநாத் (வயது 25) என இரு மகன்கள் உள்ளனர். இருவரும் காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு பழக்கடையில் லோடுமேனாக பணியாற்றி வருகின்றனர். அமர்நாத்துக்கு மாரியம்மாள் (வயது 25) என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர்.

அமர்நாத் தனது மனைவி மகன்களுடன் தனியாகவும், ரகுநாத் தனது தாய் தந்தையுடன் தனியாக வசித்து வருகிறார்.இந்நிலையில் ரகுநாத்திற்கு அண்ணி மாரியம்மாளுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருவரும் தங்கள் செல்போன்களில் ஆபாச படங்களை மாறி மாறி பரிமாறிக் கொண்டுள்ளனர்.பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது போல இந்த வில்லங்க விவகாரம் அமர்நாத்திற்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த அமர்நாத் தனது மனைவியின் கழுத்தை கத்தியால் வெட்டியதில் மாரியம்மாள் அலறியபடியே ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். இதனையடுத்து வெட்டிய கத்தியுடன் அமர்நாத் திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மாரியம்மாள் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மாரியம்மாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் அமர்நாத் மீது கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்