திருச்சி காந்தி மார்க்கெட் அருகே ஆங்கிலேயர் ஆட்சியில் காலத்தில் கட்டப்பட்ட 120 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த கட்டிடம் இயங்கி வருகிறது இந்த கட்டிடத்தை கேனா கடை என்று எல்லோராலும் அழைக்கபடும் மீன் மார்க்கெட் இறைச்சிக் கடை கோழிக்கறி கடை ஆகியவை செயல்பட்டு வருகிறது. இங்கு 60க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகள் செயல்பட்டு வருகிறது. பொதுவாக சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் பொதுமக்கள் அதிக அளவில் இறைசிகளை வாங்கி செல்வார்கள்.

தற்போது கொரோனா காலம் என்பதால் கொரோனா பரவலை தடுக்கும் வண்ணம் மாநகராட்சி நிர்வாகம் தற்போது இயங்கி வரும் இடத்தில் சுமார் 13 கோடி மதிப்பீட்டில் புதிய மீன் மார்க்கெட் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதனால் இங்கு இயங்கி வந்த கடைகளை தற்காலிகமாக வேறு இடத்தில் மீன் மார்க்கெட்டை இடமாற்றம் செய்ய மாநகராட்சி நிர்வாகம் மீன் கடை வியாபாரிகளுக்குஉத்தரவிட்டிருந்தது.

 இந்நிலையில் கடந்த ஒரு வாரங்களுக்கு முன்பு மாநகராட்சி அதிகாரிகள் புதிதாக மார்க்கெட் கட்டப் போவதாக வியாபாரிகளிடம் கூறி இங்குள்ள பொருட்களை அப்புறப்படுத்தி காந்தி மார்க்கெட் மணிக்கூண்டு பின்புறத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள இடத்தில் இடமாற்றம் செய்யக்கோரி சொல்லியிருந்தனர்.

ஒரு வாரம் கால அவகாசம் இன்றுடன் முடிந்த நிலையில், வியாபாரிகள் எந்த பொருட்களை எடுத்து செல்லாததால் மாநகராட்சி அதிகாரிகள் திடீரென ஜேசிபி இயந்திரத்துடன் வந்து தரைத்தளத்தில் உள்ள பாறாங்கற்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் வியாபாரிகளுக்கும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பின் காவல்துறை ஒத்துழைப்புடன் மார்க்கெட் இடிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் எந்த அறிவிப்பும் இன்றி திடீரென மாநகராட்சி அதிகாரிகள் தற்போது கடைகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டதால் இன்று விற்பனைக்காக கொண்டு வந்த 5 லட்சம் மதிப்பிலான மீன்கள் இறைச்சிகள் எதுவும் விற்பனையாகாமல் வீணானதாக வியாபாரிகள் வருத்தம் தெரிவித்தனர்.

தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள மீன் மார்க்கெட் பகுதியில் ஒவ்வொரு கடைக்கும் இட நெருக்கடியாகவும், கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை எனவும்,

மேலும் உரிய அடிப்படை வசதிகள் இல்லாததால் அங்கு கடை தொடங்கினால், மக்கள் கூட்டம் நிற்பதற்கு உரிய சமூக இடைவெளி இல்லை எனவும், ஆகையால் வைரஸ் தொற்று பரவும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதாக குற்றம்சாட்டிய மீன் வியாபாரிகள் கடை நடத்துவதற்கு மாநகராட்சி அதிகாரிகள் உரிய வசதிகளை செய்து கொடுத்தால் அதற்கு பின்பு தற்காலிக புதிய மீன் மார்க்கெட் பகுதிக்கு செல்ல தயாராக இருக்கிறோம் மேலும் இன்று ஆடு இறைச்சி மீன் இறைச்சிகள் சுமார் 5 லட்சம் மதிப்பில் வீணாகி உள்ளது என தெரிவித்தனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published.