திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாரம் தோறும் நடைபெற்று வரும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தலைமையில் இன்று நடந்தது. இந்நிலையில் கூட்ட அரங்கின் முன்பு முசிறி தண்டலை பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் பெரியசாமி என்பவர் தனது மனைவியை மீட்டுத் தரக்கோரி யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென தன் மீதும் தனது இரண்டு பெண் பிள்ளைகள் மற்றும் மகன் ஆகியோரின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.அப்போது அங்கு மாவட்ட குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்க வந்த பொதுமக்களிடம்,

அவர்கள் அளிக்க வந்த கோரிக்கை மனுவை செய்தியாக வெளியிடுவதற்காக செய்தி சேகரித்துக் கொண்டிருந்த நியூஸ் 7 டிவியின் நிருபர் நெப்போலியன், மண்ணெண்ணெய் கேனை தட்டிவிட, வெளிச்சம் டிவியின் நிருபர் ஜான் கண்ணன், வரலாறு நாளிதழின் நிருபர் முனீஸ்வரன் ஆகியோர் பெரியசாமியின் கையிலிருந்த தீப்பெட்டியை பிடுங்கி எறிந்தனர். மேலும் மக்கள் கோட்டை நாளிதழின் நிருபர் பாலு, தமிழ் சுடர் நாளிதழின் நிருபர் ஆனந்த் ஆகியோர் விரைவாக செயல்பட்டு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற குடும்பத்தை தடுத்து நிறுத்தி காப்பாற்றினர், இது போன்ற சமூக நலனில் அக்கறை கொண்டு பத்திரிக்கைத் துறையில் சிறப்பாக பணியாற்றிவரும்               நிருபர்களுக்கு                            “தமிழ் முழக்கம்”          சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறது.

 

Leave a Reply

Your email address will not be published.