தேசிய சிறுபான்மையினர் மக்கள் இயக்கத்தின் திருச்சி மாவட்ட இளைஞர் அணி சார்பில் மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கும் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தேசிய சிறுபான்மை மக்கள் இயக்கத்தின் தலைவர் ஜோயல் சுந்தர் சிங் தேசிய பொதுச்செயலாளர் வனிதா தேசிய செயலாளர் பிரசாத் தேவ சித்தம் ஆகியோர் கலந்துகொண்டு தேர்வு செய்யப்பட்டுள்ள புதிய நிர்வாகிகளுக்கான அடையாள அட்டைகளை வழங்கினார்கள்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய தேசிய சிறுபான்மை மக்கள் இயக்க தலைவர் ஜோயல்சுந்தர்சிங்:- முதலாவதாக தலித்துகளுக்கு தனி இட ஒதுக்கீடு என்று தமிழக முதல்வர் அறிவித்தது வரவேற்புக்கு உரியது எனவே முதலாவதாக அவருக்கு இக்கூட்டத்தின் வாயிலாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் ஆனால் இது வெறும் அறிவிப்போடு நின்று விடாமல் அனைவரும் பயன்படக்கூடிய வகையில் செயல்படுத்திட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கிறோம்.

தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் கட்சிகள் சிறுபான்மையினருக்கான பல திட்டங்களை அறிவித்தாலும் அதை செயல்படுத்துவதில் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டு வருவகிறது. சிறுபான்மையினருக்கு என்று பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டு அந்தத் திட்டங்கள் மூலம் சிறுபான்மையினர் பயனடைந்தார்கள் என்பது குறித்தும் ஒரு ஆய்வு நடத்த வேண்டும்.

எந்த கட்சிகளாக இருந்தாலும் அவர்களின் வெற்றி வாய்ப்பை தீர்மானிக்க கூடிய சக்திகளாக சிறுபான்மையினர் இருப்பதால் அவர்களின் நலனில் கூடுதல் அக்கறை செலுத்திட வேண்டும் என்ற கோரிக்கைகளும் முன்வைக்கிறோம் என தெரிவித்தார். இக்கூட்டத்தில் இயக்கத்தில் , மாநில, மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் என 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்