திருச்சி மாவட்டம் குண்டூர் பகுதியை சேர்ந்த சேகர்-உஷா தம்பதியரின் மகள் தனலெட்சுமி (வயது 22) சிறு வயதில் தந்தையை இழந்த தனலெட்சுமி தனது தாயின்அறவனைப்பில் வளர்ந்து வந்தவர். பல தடைகளை கடந்து இச்சாதனைகளை புரிந்திருக்கிறார். மேலும் தனது தாயின் கனவான ஒலிம்பிக்கில் பங்குபெறுவதை நிறைவேற்றி உள்ளார். தடகள வீராங்கனையான இவர் பல்வேறு மாநில தேசிய தடகள போட்டிகளில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்று தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்ட பதக்கங்களை வென்றுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடைபெற்ற தேசிய தடகள போட்டியில் பங்கேற்ற தனலெட்சுமி தங்கப்பதக்கத்தை வென்று தடகள விளையாட்டு வீராங்கனை P.T.உஷா அவர்களின் 23 ஆண்டு கால சாதனையையும் முறியடித்து சாதனை படைத்து திருச்சி வந்த அவருக்கு திருச்சி ரெயில் நிலையத்தில் மாற்றம் அமைப்பு மற்றும் பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் வருகிற 23-ந் தேதி டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்கில் 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்ட போட்டிக்கு அவர் தேர்வாகி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்ற கனவு நிஜமானது. தங்கம் வென்று தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்ப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மாற்றம் அமைப்பின் நிர்வாகி ஆர்.ஏ.தாமஸ் மற்றும் நிர்வாகிகள் தனலெட்சுமிக்கும் அவரது தாயருக்கும் வாழ்த்துக்ககளை தெரிவித்தனர் இச்சாதனை புரிய சிறந்த முறையில் பயிற்சி அளித்த சர்வதேச தடகள விளையாட்டு வீரரும் பயிற்ச்சியளருமான மணிகன்ட ஆறுமுகத்திற்க்கும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *