திருச்சி மாவட்டம் அதவத்தூர் மேலத்தெருவைச் சேர்ந்தவர் ரெங்கராஜ் வயது 46 சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இவர் தினமும் குடித்து விட்டு தனது மனைவி மல்லிகாவிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று ரெங்கராஜ், மல்லிகாவிடம் தகராறு செய்து தாக்கியதாக தெரிகிறது. இதையறிந்த ரெங்கராஜ் மகன் பார்த்தசாரதி வயது 19 தந்தை ரெங்கராஜை பார்த்து ஏன் இப்படி தினமும் தகராறு செய்து என் தாய்யை அடித்தீர்கள் என்று கேட்டதற்கு

தந்தை ரெங்கராஜ், பார்த்தசாரதியிடமும் தகராறு செய்ய முயன்றார். ஆத்திரமடைந்த பார்த்தசாரதி வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து தந்தை என்று பாராமல் ரெங்கராஜை சரமாரி வெட்டினார். படுகாயமடைந்த ரெங்கராஜ் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை ரெங்கராஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சோமரசம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து பார்த்தசாரதியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்