தமிழகம் முழுவதும் இன்று திமுகவின் செயல்பாடுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி ஒருங்கிணைந்த அதிமுக மாவட்ட கழகம் சார்பில் சிந்தாமணி அண்ணா சிலை அருகில் மாவட்ட கழக செயலாளர்கள் குமார், பரஞ்ஜோதி, சீனிவாசன் ஆகியோர் தலைமையில் திமுக அரசு பதவியேற்ற நாளிலிருந்து சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாக சீர்கேடு அடைந்துள்ளதற்கும்,

தமிழகம் போதை பொருட்களின் கேந்திரமாக மாறி, வருங்கால தலைமுறையினரின் வாழ்க்கை சீரழிந்து வருவதற்கும்; போதைப்பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளதற்கும் காரணமான திமுக அரசை கண்டித்து கோஷமிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரத்தினவேல், முன்னா சட்டமன்ற கொறடா மனோகரன், முன்னாள் அமைச்சர் வளர்மதி, திருச்சி மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட மாணவரணி செயலாளர் என்ஜினியர் இப்ராம்ஷா, திருச்சி மாநகர் மாவட்ட மாணவரணி துணைத் தலைவர் வழக்கறிஞர் சேது மாதவன், மற்றும் மாவட்ட இளைஞர், இளம்பெண்கள் பாசறை, மகளிர் அணி, மாணவர் அணி ஆகிய சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்