அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர் முன்னாள் தமிழக முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி ஆகியோர் ஆணைக்கிணங்க மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்த திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி ஜங்ஷன் வழிவிடு வேல்முருகன் கோவில் அருகில் இன்று நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சரும் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளருமான வெல்லமண்டி நடராஜன் கண்டன உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில் திமுக ஆட்சி அமைத்து மக்களுக்கு எந்த ஒரு நல்ல காரியமும் முழுமையாக செய்யவில்லை குறிப்பாக பேனர் கலாச்சாரத்தை ஒழிப்போம் என சொல்லிக்கொள்ளும் திமுகவினர் திருச்சி மாநகரை பொருத்தவரை திமுக அமைச்சர்கள் ஒருவருக்கொருவர் போட்டிப் போட்டுக் கொண்டு மாநகர் முழுவதும் பேனர் ஒட்டி வருகின்றனர். காவல்துறையினர் திமுகவின் பேனரை அகற்றவில்லை என்றால் திமுகவின் பேனர் மீது அதிமுக போஸ்டர் ஒட்ட படும் என எச்சரிக்கை விடுத்து பேசினார்.

 

இந்த ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளாக:- 

பெட்ரோல் டீசல் மீதான மாநில வரியை குறைக்கக் கோரியும், கட்டுக்கடங்காத அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை குறைத்திட கோரியும், மாணவர்களின் கல்விக் கடனை ரத்து செய்யக்கோரியும், அம்மா கிளினிக் திட்டத்தை திமுக அரசு மூட நினைப்பதை கைவிடக் கோரியும், தேர்தல் வாக்குறுதியான குடும்பத் தலைவிகளுக்கு ரூபாய் 1000 வழங்கும் திட்டம் அமல்படுத்தக் கோரியும்,

மழையினால் பாதிக்கப்பட்டு நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மாநகர் மாவட்டம் புறநகர் மாவட்டம் உள்ளிட்ட அதிமுக கட்சி நிர்வாகிகள் மகளிர் அணியினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்