திருச்சி மாவட்டம் முசிறி அருகே திருஈங்கோய்மலை அமைந்துள்ளது. இந்த மலையின் உச்சியில் மிகவும் பழமை வாய்ந்த சிவாலயத்தில் மூலவர் மரகதாசலேஸ்வரர் எனும் பெயர் கொண்ட ஈஸ்வரனை அகத்தியர் ஈ உருக்கொண்டு வழிபட்டதாக புராண சம்பவங்கள் கூறப்படுவதுண்டு. இந்நிலையில் மலைகோயிலில் பகுதியில் இன்று திடீரென காட்டுத் தீ பற்றி எரிந்தது. மேலும் காற்றின் வேகத்தில் மளமளவென பரவிய தீ மலை முழுவதும் பரவியது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு முசிறி தீயணைப்புத் துறையினர் வந்து பார்வையிட்டனர்.

மலைமேல் பரவி வரும் காட்டுத் தீயை தண்ணீரை பீச்சி அடித்து அணைத்தனர். மேலும் தீ பரவியதால் தீயை அணைக்க அப்பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களின் உதவியுடன் தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்து வருகின்றனர். தற்போது காட்டுத்தீ மலையடிவாரத்தை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு வராமல் தடுக்கும் முயற்சியில் அப்பகுதியை சேர்ந்த வாலிபர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *