திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க.செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

அதிமுக கழக இணை ஒருங்கிணைப்பாளர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,கழக ஒருங்கிணைப்பாளர் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் அறிவுறுத்தலின் படி சேலம் புறநகர் மாவட்ட பேரவை செயலாளர் இளங்கோவன் தலைமையில் ஆத்தூர் எம்எல்ஏ .ஜெயசங்கரன் முன்னிலையில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக அமைப்பு தேர்தல் ஆலோசனை கூட்டம் வருகிற15-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணியளவில் முசிறி ஐ.எம்.ஏ திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.அது சமயம் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி கவுன்சிலர்கள் அனைவரும் திரளாக பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இதைத்தொடர்ந்து திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. அமைப்பு தேர்தல் வருகிற 16-ஆம் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. அன்றைய தினம் ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் பகுதிகள், மணிகண்டம் வடக்கு, மணிகண்டம் தெற்கு ,மணப்பாறை வடக்கு ,அந்த நல்லூர் வடக்கு ,அந்தநல்லூர் தெற்கு ஒன்றியங்களுக்கும்,சிறுகமணி பேரூராட்சிக்கும் குமாரவயலூர் மணிமுத்து செல்வம் திருமண மண்டபத்தில் தேர்தல் நடக்கிறது.மண்ணச்சநல்லூர் கிழக்கு ஒன்றியம், முசிறி மேற்கு, முசிறி கிழக்கு ஒன்றியங்களுக்கும், மண்ணச்சநல்லூர் , சா.கண்ணனூர் பேரூராட்சி களுக்கும் தேர்தல் மன்னச்சநல்லூர் பைபாஸ் சாலை உளுந்தங்குடி ரவுண்டானா தனலட்சுமி மணி மஹாலில் தேர்தல் நடக்கிறது. முசிறி நகரம், தொட்டியம் மேற்கு, தொட்டியம் கிழக்கு, தா.பேட்டை மேற்,கு தா.பேட்டை கிழக்கு ஒன்றியங்களுக்கும், தொட்டியம், காட்டுப்புத்தூர், தா.பேட்டை, மேட்டுப்பாளையம் பேரூராட்சிகளுக்கும் தேர்தல் முசிறி ஐ .எம்.ஏ. திருமண மண்டபத்திலும், துறையூர் நகரம், துறையூர் வடக்கு, துறையூர் தெற்கு, உப்பிலியபுரம் வடக்கு, தெற்கு ஆகிய ஒன்றியங்களுக்கும், உப்பிலியபுரம், பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சிகளுக்கு துறையூர் ஆர்த்தி திருமண மண்டபத்திலும் தேர்தல் நடக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *