அதிமுக சார்பில் வைக்கப்பட்ட கல்வெட்டை உடைத்த மர்மநபர்களை கண்டித்து திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்.

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் உள்ள அந்தநல்லூர் ஒன்றியம் பெட்டவாய்த்தலை பழங்காவேரி பகுதியில் கடந்த 2011ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த மறைந்த ஜெயலலிதாவின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு அதிமுக சார்பில் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று இரவு அந்த கல்வெட்டை மர்ம நபர்கள் இரவோடு இரவாக இடித்து தள்ளிவிட்டனர். இதனை திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பரஞ்ஜோதி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். மேலும் கல்வெட்டை உடைத்த மர்ம நபர்கள் குறித்து அந்தநல்லூர் ஒன்றிய செயலாளர் அழகேசன் பெட்டவாய்த்தலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் அதிமுக கல்வெட்டை இடித்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *