திருச்சி நாவல்பட்டு ரோடு , திருவரம்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்டார் மளிகை கடையில் ஆய்வு செய்த போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது அதனைத்தொடர்ந்து 04.08.2022 அன்று உணவு பாதுகாப்புத்துறை , மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் .ரமேஷ்பாபு மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்களால் உணவு பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டம் – 2006 – ன் படி அவசர தடையாணையின் படி சீல் செய்யப்பட்டது . மேலும் நேற்று 08.08.2022 திங்கள் கிழமை மாவட்ட நியமன அலுவலர் அவர்களுக்கு வரப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சீல் செய்யப்பட்ட நாவல்பட்டு ரோடு , திருவரம்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்டார் மளிகை கடையை ஆய்வு செய்த போது சீல் செய்ததை மீறி பின்புறம் கதவு வழியாக உணவு வணிகத்தில் ஈடுபட்டதை கண்டறியப்பட்டது .

கடையின் உரிமையாளர் குத்தூஸ் என்பவரின் மீது உணவு பாதுகாப்பு அலுவலர் வசந்தன் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் அடிப்படையில் குற்றவாளி குத்தூஸை இந்திய தண்டனைச் சட்டம் 276/2022 U / S 188 , 353,294 ( b ) , 506 ( i ) – ன் படி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் . இவ்வாய்வின் போது அப்பகுதியை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் , வருவாய் அலுவலர் , காவல் துறை அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் வசந்தன் , அன்புச்செல்வன் , செல்வராஜ் மற்றும் வடிவேல் உடனிருந்தனர் . மேலும் , தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை சீல் செய்தால் , சீலை அகற்றி விற்பனை செய்வது தெரிய வந்தால் அவர்கள் மீது கிரிமினல் குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு , சிறையில் அடைக்கப்படுவார் என்று மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.ரமேஷ்பாபு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்