திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் இன்று ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியான அந்தநல்லூர், குழுமணி, சோமரசம்பேட்டை பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் இனாம்குளத்தூர், மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனை மற்றும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி ஆகிய இடங்களில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் கொரோனா நோய்த்தொற்று மற்றும் பொது மருத்துவ சிகிச்சைகள் குறித்து அந்தந்த சுகாதார நிலைய மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மேலும் நோயாளிகளிடம் சிகிச்சைகள் குறித்தும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள வசதிகள் குறித்தும், குறைகளை கேட்டறிந்தார்.இந்த ஆய்வின் போது சோமரசம்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் குணவதி மற்றும் மத்திய மாவட்ட திமுக விவசாய தொழிலார் அணி மாவட்ட அமைப்பாளர் துரைபாண்டியன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.