கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு மாநில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. திருச்சி மாவட்டத்திலும் சில நாட்களாக பரவலாக ஒவ்வொரு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு திருச்சியில் ஒரு சில இடங்களில் பரவலாகவும் ஒரு சில இடங்களிலும் கனமழையும் பெய்தது.

இந்த நிலையில் திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள கீழக்குறிச்சி ஊராட்சியில் நேற்று இரவு திடீரென இடி சத்தம் அதி பயங்கரமாக கேட்டது வீட்டில் இருந்த மக்கள் அலறியபடி வெளியே வந்து பார்த்த பொழுது இடியானது அங்கு உள்ள ஒரு மின்கம்பத்தில் விழுந்து இருந்தது.

அதில் உள்ள மின் கம்பிகளும் அறுந்து விழுந்தது இதனால் அப்பகுதிகளில் மின்சாரம் பாதிக்கப்பட்டதோடு ஓடிக்கொண்டிருந்த தொலைக்காட்சி பெட்டிகள் எல்லாம் பழுதானது.மீட்டர் பாக்ஸ்களும வெடித்தது.

இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த கவலை அடைந்தனர். மின்சாரம் இல்லாத காரணத்தினால் இரவு முழுவதும் மிகுந்த பாதிப்படைந்தனர். அதிர்ஷ்டவசமாக எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை அந்த பகுதியில் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் தொலைக்காட்சி பெட்டிகள் பழுதானது குறிப்பிடத்தக்கது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்