தமிழகத்தில் உள் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில் தற்பொழுது திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில்
தற்பொழுது பரவலாக மழை பெய்து வருகிறது திருச்சி மாநகரில் கேகே நகர் டிவிஎஸ் டோல்கேட் மத்திய பேருந்து நிலையம் புறநகர் பகுதிகளான சமயபுரம் மண்ணச்சநல்லூர் லால்குடி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.