அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி, வருகிற 24 ஆம் தேதி, திருச்சி வண்ணாங் கோயில் பகுதியில், நடைபெற உள்ள வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு அதிமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து சிறப்புரையாற்றுகிறார்.

முன்னதாக இன்று காலை பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை ஜேசிபி எந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணி மற்றும் பொதுக் கூட்ட மேடை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அங்கு நடைபெற்று வரும் பணிகளை திருச்சி மாவட்ட செயலாளர்கள் ஜெ.சீனிவாசன், பா.குமார், மு.பரஞ்சோதி, ஆகியோர் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் எம்பி ஆகியோர் பார்வையிட்டு ஆலோசனை வழங்கி வருகின்றனர்.

இதில் முன்னாள் அமைச்சர்கள் சிவபதி, வளர்மதி, பூனாட்சி, அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், முன்னாள் எம்எல்ஏ இந்திரா காந்தி, சிறுபான்மை நலப் பிரிவு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவர் பிரசன்ன குமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் ஆர் வெங்கட்பிரபு, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவர் எம் கே கதிரவன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *