திருச்சி மாவட்ட நூலக ஆனைக்குழுவின் கீழ் இயங்கும் உறையூர் குறத்தெரு ஊர்ப்புற நூலகம் வாசகர் வட்ட கூட்டம், அதன் தலைவரும் 23 வது வார்டு மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் தலைமையில் நடைபெற்றது,

கூட்டத்தில் கோவிந்தராஜன் வரவேற்புரை நிகழ்த்தினார் , ஊர்ப்புற நூலகர் விஜயலட்சுமி 2021- 2022ல் அதிக உறுப்பினர்களை சேர்த்தமைக்காக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்களிடம் பாராட்டு பெற்ற கேடயத்துடன் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது , மற்றும் திருச்சி வெஸ்ட்ரி பள்ளியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் திருச்சி புத்தகத் திருவிழாவில் குறத்தெரு ஊர்ப்புற நூலகத்திற்கு, வாசகர்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்குவதற்கான நன்கொடைகளை வாசகர் வட்ட பிரதிநிதிகள் அணைவரும் அளித்தனர்,

மேலும் வருகிற செப்டம்பர் 23 ஆம் தேதி அன்று மாலை 5 மணி அளவில் புத்தக திருவிழாவிற்கு வாசகர்களோடு பெருந்திரளாக திருச்சி புத்தகத் திருவிழாவிற்குசென்று நூலகத்திற்கு தேவையான புத்தகங்களை வாங்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, நிறைவாக வாசகர் வட்ட உறுப்பினர் லதா நன்றியுரை தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *