திருச்சியில் புரட்டாசி மாதத்தில் ஒரே இடத்தில் 108 திவ்ய தேச பெருமாளின் தரிசனம் நிகழ்வு நாளை தொடங்கி 9-ந் தேதி வரை நடக்கிறது .திருச்சி பறவைகள் சாலையில் உள்ள வாசவி மஹாலில் அஸ்வின் ஸ்வீட்ஸ் நிறுவனம்,எஸ் டிவி நிறுவனம் இணைந்து நடத்துகிறது. நாளை தொடங்கும் இந்நிகழ்வில் காலை 8.30 மணி அளவில் வேளுக்குடி உ. வே .கிருஷ்ணன் துவக்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடக்கிறது.மாலை 6.30 மணி அளவில் கருணாகரச்சாரியார் சுவாமி திவ்ய தேசங்களின் பெருமை குறித்து சொற்பொழிவு ஆற்றுகிறார்.

அக்டோபர் 1-ந் தேதி மாலை 6.30 மணிக்கு பேராசிரியர் விஜய சுந்தரியின் ஆன்மீக சொற்பொழிவு நடக்கிறது. அக்டோபர் 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.30 மணிக்கு கவிதா ஜவகர் கண்ணன் நம் தோழன் என்ற தலைப்பில் பேசுகிறார் .அக்டோபர் 3-ந்தேதி (திங்கட்கிழமை) மாலை 6.30 மணிக்கு ஞானசம்பந்தன் கிருஷ்ணன் தூது என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றுகிறார். 4-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) ஸ்ரீமதி சுசித்ரா ஹரிகதை சொற்பொழிவும், 5 ந் தேதி (புதன்கிழமை) மாலை 6:30 மணிக்கு ஸ்ரீ காஞ்சி காமகோடி பீட ஆஸ்தான வித்வான் கலைமாமணி ராஜேஷ் வைத்யாவின் இன்னிசை நிகழ்வு நடக்கிறது. 6-ந் தேதி (வியாழக்கிழமை) கவிஞர் மணிகண்டன் ராமன் காட்டிய வழி என்ற தலைப்பிலும், 7. ந் தேதி (வெள்ளிக்கிழமை) திருவண்ணாமலை எழிலரசியின் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியும் நடக்கிறது. 8-ந் தேதி மாலை 6:30 மணிக்கு டாக்டர் ஸ்ரீ உ.வே.வெங்கடேஷ் ஆழ்வார்களும், நவராத்திரியும் என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றுகிறார்.

புரட்டாசி மாதத்தில் திருச்சியில் ஒரே இடத்தில் நடக்கும் 108 திவ்ய தேச பெருமாளின் தரிசனம் நிகழ்ச்சி நாளை காலை தொடங்குகிறது. இந்நிகழ்வை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கிறார்.இதில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், தொழிலதிபர் கே.என்.அருண் நேரு, சுந்தர் பட்டர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கிறார்கள். திவ்யதேச பெருமாளின் தரிசனத்தை கண்டுகளிக்க டிக்கெட் முன்பதிவு செய்யலாம் .இந்த பெருமாள் தரிசனத்தை அனைவரும் ஒரே இடத்தில் கண்டு களித்து, தரிசனம் செய்து பயன்பெறுமாறு விழா குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்