திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் கலந்து கொண்டார். முன்னதாக இன்று காலை தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு அமைச்சர்கள், அதிகாரிகள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இவ்விழாவில் ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் அமுதா வரவேற்புரை வழங்கினார். அதனை தொடர்ந்து தமிழக முதல்வருக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு 7 அடி உயரமுள்ள வெள்ளி செங்கோல் வழங்கினார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெள்ளி கேடயம் மற்றும் பேருந்து வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து பேசிய தமிழக முதல்வர். அமைச்சரவைக்கு புதியவராக வந்துள்ள உதயநிதிக்கு இளைஞர் நலன், விளையாட்டுத்துறை, மகளீர் மேம்பாடு, வறுமை ஒழிப்பு, கிராமப்புற கடன் உள்ளிட்ட துறைகளை வழங்கி உள்ளோம். எனவே அவருடைய துறையை மிகச்சிறப்பாக மேம்படுத்துவார் என்று முதல் அமைச்சராக நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன்.தமிழகத்தில் 4 மண்டலங்களில் ஒலிம்பிக் அகாடமி உருவாக்கப்பட உள்ளது. இது கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி சட்டமன்றத்தில் அறிவிக்கபட்டது. அதில் திருச்சி மாவட்டத்திற்கு அனை வசதிகளுடன் கூடிய ஒலிம்பிக் அகாடமி தொடங்கப்படும். இதுவரை தமிழகத்தில் நடை பெற்ற அரசு விழாக்கள் அனைத்தும் மக்கள் விழாவாக தான் நடைபெற்றுள்ளது. அந்த ஒவ்வொறு விழாக்களிலும் 1 லட்சம் மக்கள் நேரடியாக பயன்பெற்று வருகின்றனர். தமிழகத்தில் மொத்தம் 4லட்சத்து 38ஆயிரம் குழுக்கள் உள்ளன. அதில் 50 லட்சத்து 24ஆயிரத்து உறுப்பினர்கள் உள்ளனர்.2021-2022 நிதி ஆண்டில் சுய உதவி மகளீர் குழுக்களுக்கு 20ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் 21,392 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் 52 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

2022-2023 நிதி ஆண்டில் 25ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த மாதம் 16ஆம் தேதி வரை 14.25 ஆயிரம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ளவையும் வழங்கப்படும் என்று கூறினார்.சிறப்பாக செயல்படும் மகளீர் சுய உதவி குழுக்களை ஊக்கப்படத்த கடந்த 2007 ஆம் ஆண்டு மணிமேகலை விருது அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு 33 அமைப்புகளுக்கு இந்த விருது வழங்கபடுகிறது. 2008-2009 ல் சிறந்த வங்கியாளர் விருது வழங்கபட்டு வருகிறது. அதில் கடந்த ஆண்டுகளில் கொரோனா நோய் தொற்றால் விருது வழங்கபடவில்லை. இன்று 8 வங்கிகளுக்கு சிறந்த வங்கியாளர் விருது வழங்கபட்டது. பொதுவாக ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்பதாக பழமொழி கூறுவார்கள் ஆனால் நான் எனக்கென்று ஒரு அளவுகோல் வைத்துள்ளேன் அதில் ஏழையின் சிரிப்பிலும் இந்த மகளிர் இன் முகத்தில் மகிழ்ச்சியையும் அண்ணாவையும் கலைஞரையும் காண்கிறேன் அதுதான் நான் வைத்திருக்கும் அளவுகோல், எனவே அமைச்சராக பொறுப்பேற்று இருக்கக்கூடிய உதயநிதிக்கு என்னுடைய அன்பான வேண்டுகோள் இந்த மகளிர் எப்போதும் உயர்ந்து இருக்க வேண்டும் அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட வேண்டும் எனவே புதிய அமைச்சர் சிறப்பாக செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன் என்றார்.

பின்னர் ரூ.655 கோடி மதிப்பீட்டிலான 5,639 புதிய திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்.மேலும் ரூ.308 கோடி மதிப்பீட்டிலான 5951 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.அதனை தொடர்ந்து ரூ.79 கோடி மதிப்பீட்டிலான 22,716 பயனாளிகளுக்கு நலத் திட்டஉதவிகள் வழங்குகினார்.அதில் 4,000 மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு சுழல்நிதியும், கடன் உதவியும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மா.சுப்பிரமணியன்,  தங்கம் தென்னரசு, மூர்த்தி, மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், எம்.பிக்கள் திருநாவுக்கரசர், ஜோதிமணி, திருச்சி சிவா சட்டமன்ற உறுப்பினர்கள் மாமன்ற உறுப்பினர்கள் அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *