திருச்சி காஜாமலை , லூர்துசாமிபிள்ளை காலனி அருகில் பயன்படுத்தபட்ட பழைய கார் விற்பனை முகவர் ஒருவர் தனது வேலை முடித்துக்கொண்டு , பையில் ரூபாய் 2 இலட்சம் பணத்துடன் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது , இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபர்கள் வழிமறித்து ரூ .2 இலட்சம் பணம் மற்றும் செல்போனை கொள்ளையடித்து சென்றதாக கே.கே நகர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு , தனிப்படை அமைக்கப்பட்டு , தீவிர புலன்விசாரணை செய்யப்பட்டடது .

மேற்கண்ட வழக்கு தொடர்பாக திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு , புலன்விசாரணையில் சந்தேகநபர்களின் நடவடிக்கையை தீவிரமாக கண்காணித்தும் , சந்தேக நபர்களின் அலைபேசி எண்களின் விபரங்களை சேகரித்து தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வந்தது . விசாரணையில் 6 திருட்டு வழக்குகள் மற்றும் கஞ்சா வழக்கில் சம்மந்தப்பட்ட பழைய குற்றவாளியான ஜோஸ்வா ( எ ) ராஜேஷ்குமார் மற்றும் ஆதம், புளுக்கு ( எ ) பிரசாத் ஆகிய மூன்று நபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டதை ஒப்புக்கொண்டனர் . அவரைத் தொடர்ந்து மூன்று பேரும் கைது செய்யப்பட்டு , வழக்கு சொத்தான பணம் மற்றும் கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் கைப்பற்றப்பட்டு , வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *