தேசிய தூய்மை காற்று திட்டத்தின் கீழ் திருச்சி மாநகராட்சி பள்ளி மாணவர் – மாணவியர் பங்கேற்ற காற்று மாசு குறைப்பு மற்றும் சுத்தமான எரிபொருளும் அதன் பயன்களும் என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி மற்றும் ஓவியப் போட்டிகள் இன்று ஏர்போர்ட் வயர்லெஸ் ரோடு மேல்நிலைப்பள்ளியில் நடைப்பெற்றது.

இந்த நிகழ்ச்சியில் வாய்ஸ் அறக்கட்டளை திட்ட இயக்குனரும் லால்குடி கல்வி மாவட்ட பசுமைப்படை ஒருங்கிணைப்பாளருமான கிரிகோரி வரவேற்று பேசினார். பள்ளிக்கல்வித்துறை ஆலோசனைப்படி, 6,7,8,9 வகுப்புகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன . வெற்றி பெற்ற மாணவர்-மாணவிகளுக்கு திருச்இ மாநகராட்சி உதவி ஆணையர் சண்முகம் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

 இந்த நிகழ்ச்சியில் திருச்சி மத்திய சிறைச்சாலை மேலாளர் மற்றும் கவிஞர் திருமுருகன், கலந்து கொண்டு, தூய காற்றின் முக்கியத்துவத்தை உலகெங்கும் உணரத் தொடங்கி இருக்கின்ற இவ்வேளையில், காற்று மாசை குறைப்பதற்கும், சுத்தகமான எரிபொருளால் நற்காற்றுக்கு வழிவகுப்பதற்கும் இந்த போட்டிகள் உதவியதை பாராட்டினார் தூய காற்றாக இருந்ததை மாசுக்கள் சூழ்ந்திருக்கின்றன என்று குறிப்பிட்ட அவர், காற்றை தூய்மையாக்க நம்மால் முடிந்ததை செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சி பற்றிய துணிப் பதாகையில் குறிப்பிட்டபடி பொருளை எரிக்காமல் இயந்திர புகை கூட்டாமல் காற்று மாவு தடுப்போம் ; மரங்கள் வளர்த்து , அண்டவெளி – ஓசோன் மண்டலம் பாதுகாத்து நற்காற்றுக்கு வழி வகுப்போம் ; தூய காற்றே – இன்று மற்றும் நாளைய தலைமுறைக்கு நாம் தரும் பரிசு என்று வலியுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் காவல்துறை உதவி ஆணையர் சுரேஷ்குமார், 61வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜாஃபர் அலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *