திருச்சி தேவராயநேரி பகுதியை சேர்ந்தவர் லாரன்ஸ் வயது(28). நரிகுறவர் இனத்தை  சேர்ந்த இவர் திருச்சி மன்னார்புரத்திலுள்ள பிரபல தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வரும் போது பொன்மலைப்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன் மகள் சிவகாமி(25) என்பவருடன் காதல் ஏற்பட்டு உள்ளது. இந் நிலையில் கடந்த மே மாதம் 17ம் தேதி கோ-அபிஷேகபுரத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த திருமணம் குறித்து லாரன்ஸ் பெற்றோருக்கு தெரிய வர ஆத்திரம் அடைந்த அவர்கள் நேற்று முன்தினம் இரவு சிவகாமி வீட்டின் முன்பாக கூடி தகராறில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி பொன்மலை போலீஸ் நிலையத்தில் பேச்சு வார்த்தை நடத்தலாம் என்று அனுப்பி வைத்தனர்.

இதனால் இன்று மதியம் பொன்மலை போலீஸ் நிலையத்தில் ஏராளமான நரிக்குறவர்கள் முற்றுகையிட்டனர். சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற பிரச்சினைக்கு பின்னர் இருதரப்பிற்கும் இடையே சமாதான கடிதம் பெற்றப்பட்டு போலீசார் கலைந்து போக அறிவுறுத்தினர். மாப்பிள்ளை வீட்டார் புறப்படுவதற்கு முன்னர் பொண்ணு மாப்பிள்ளையை பார்த்து விட்டு செல்ல வேண்டும் என்று வற்புறுத்தவே போலீசார் உள்ளே இருந்த புதுமணத்தம்பதியினரை அழைத்து வந்தனர். அவர்களை பார்த்த நரிகுறவர்கள் பொண்ணு மாப்பிள்ளைக்கு வாழ்த்தி விட்டு சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *