சமீபத்தில் பெய்த பெருமலையின் காரணமாக பல இடங்களில் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.. இந்த வெள்ளப் பெருக்கினால் கொள்ளிடம் பழைய பாலம் அதன் தூண்கள் சேதம் அடைந்து குடிநீர் நீரேற்றும் மோட்டார் குழாய்கள் உடைந்து… குடிநீர் நீரேற்றுவது பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் துவாக்குடி நகராட்சிக்கு உட்பட்ட பொதுமக்களுக்கு கடந்த மாதங்களில் குடிநீர் வரத்து நின்று போனது… இதற்கிடையில் நீரேற்றும் மின்மோட்டார் குழாய்கள் சரி செய்யப்பட்டு சென்ற வாரம் ஒரு நாள் மட்டும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. அதற்கு அடுத்து பெய்த மழையின் காரணமாக மீண்டும் கொள்ளிடம் ஆற்றின் பழைய பாலத்தின் தூண்கள் பாதிக்கப்பட்டு குடிநீர் விநியோகிப்பது துண்டிக்கப்பட்டது.

இருப்பினும் திருச்சி துவாக்குடி மலை, அண்ணா வளைவு,9 வது வார்டு செடி மலை முருகன் கோவில் தெரு ஆகிய பகுதி மக்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்து நகராட்சியின் பொறுப்பில் லாரிகள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 800 குடும்பங்களுக்கு மேல் வசிக்கும் ஒன்பதாவது வார்டு பொதுமக்களுக்கு வாரத்திற்கு ஒரு முறை தான் ஒன்று அல்லது இரண்டு லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் மக்களுக்குள்ளே தண்ணீர் பிடிப்பதில் மோதல்களை உருவாக்குவதும், தங்களுக்கு சாதகமான பகுதிகளுக்கு மட்டும் தண்ணீரை விநியோகம் செய்துவிட்டு. பல பகுதி மக்களை புறக்கணிப்பது தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் தண்ணீர் இன்றி தவிக்கும் மக்கள் இன்று மாலை திருச்சி தஞ்சை நெடுஞ்சாலையை மரித்து காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த துவாக்குடி காவல் நிலைய அதிகாரிகள் நீண்ட நேரம் மக்களிடம் சமாதானம் படுத்தியும் மக்கள் பின்வாங்கவில்லை…இறுதியாக துவாக்குடி காவல் ஆய்வாளர் சம்பந்தப்பட்ட நகராட்சி துறை இடம் தண்ணீர் வழங்குவதற்கு ஏற்பாடு செய்கிறோம் அவர்கள் வழங்கவில்லை என்றால் காவல்துறையின் சார்பிலும் நாளை தண்ணீர் விநியோகம் செய்கிறோம் என்று உறுதி அளித்தனர். இப்பொழுது இந்த மறியல் போராட்டத்தை கைவிடுங்கள் என்று கோரிக்கை வைத்ததனால் மக்கள் தற்காலிகமாக போராட்டத்தை நிறுத்தி உள்ளனர்.முறையாக எல்லா தெருவுக்களுக்கும் பகுதி மக்களுக்கும் பயன்படுத்துகின்ற அளவில் தண்ணீர் கிடைக்கும் வரை தொடர்ந்து மக்கள் போராடுவோம் என்கிற உணர்வோடு கலைந்து சென்றனர்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்