தீபாவளி என்றாலே திருச்சி நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் என்னும் NSB ரோடு தான்.இங்கு திருச்சி மட்டுமல்லாது பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர்,கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் புத்தாடைகள், ஆபரணங்கள் வாங்கவும், பர்னிச்சர், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வாங்கவும் குவிந்து வருகின்றனர்.இங்கு வரும் பொதுமக்களின்‌ பாதுகாப்பு கருதி அவர்கள் தங்களின் உடைமைகளையும்,குழந்தைகளையும் கவனமாக பார்த்துக் கொள்ளவும் அசம்பாவிதங்கள் அல்லது சந்தேகப்படும்படியான நபர்கள் பற்றிய தகவலை தெரிவிக்கவும் 6 தற்காலிக காவல் உதவி மையத்தை திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் இன்று திறந்து வைத்தார்.

இந்த தற்காலிக காவல் உதவி மையத்தில் பெரிய கடைவீதி,சின்னக்கடை வீதி,மலைக் கோட்டை வாசல்,NSB ரோடு ஆகிய பகுதியில் உள்ள 127 சிசிடிவி காமிராவின் கண்ரோலானது இங்கு பெரிய திரையின் மூலம் கண்காணிக்கப்படுகிறது.இந்த பாதுகாப்பு பணிகளுக்காக 2 துணை ஆணையர்கள் 4 உதவி ஆணையர்கள் 12 ஆய்வாளர்கள் உட்பட 784 காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.மேலும் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்காக தெப்பக்குளம் அஞ்சல் அலுவலகம் பின்புறம் உள்ள மாநகராட்சி சொந்தமான மைதானம்,தெப்பக்குளம் பிஷப் ஹீபர் பள்ளி,கோட்டை ரயில்வே ஸ்டேஷன் ரோடு பார்க்கிங் ஆகிய இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய காவல் துறை ஆணையர் கார்த்திகேயன் கூறுகையில்.

இங்கே பாதுகாப்புக்காக ஒரு ட்ரோன் கேமராவும் பயன்படுத்தப்படுகிறது.மேலும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்தும்,முகக்கவசம் அணிந்தும் காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுகோள் விடுத்தார்.மேலும் 90 சதவீத மாநகர காவலர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளனர் எனவும் திருச்சி மாநகரில் 1500 கேமராக்கள் பொருத்தப்பட்டு குற்றச் சம்பவங்களை தடுக்கும் நடவடிக்கை ஈடுபட்ட நிலையில் 350 காமிராக்கள் பழுது நீக்கும் பணி நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்