திருச்சி லால்குடி, மங்கமாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜானகி. இவரது பிறந்த 10 நாள் ஆன பெண் குழந்தையை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி குழந்தையை கடத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தலைமறைவாக இருந்த வந்த குழந்தையின் தாய் ஜானகியை லால்குடி போலீஸார் கைது செய்தனர். மேலும் கடத்திய குழந்தை எங்கே உள்ளது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் போலீஸ் விசாரணையில் கடத்தப்பட்ட குழந்தையின் தாய் ஜானகி முன்னுக்கு பின் முரணான தகவல் அளித்ததால், கடத்தப்பட்ட குழந்தை 4 மாதங்கள் ஆகியும் மீட்கபடாத நிலையில் குழந்தையின் தாய் ஜானகியை ஐந்துக்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்த வழக்கு சம்பந்தமாக திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித் குமார் உத்தரவின் பேரில் மூன்று ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைத்து வழக்கறிஞர் பிரபு அவரது இரண்டாவது மனைவி சண்முகவள்ளியை போலீசார் தேடி வருகின்றனர். இந்தக் கடத்தல் சம்பவத்தில் குழந்தையை விற்பனைக்காக கடத்தினார்களா? அல்லது நரபலி கொடுப்பதற்காக கடத்தினார்களா? என்பது கொடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *