தமிழகத்தில் போலியோவை முற்றிலும் ஒழிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை, 43 ஆயிரத்து 51 இடங்களில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம்கள் நடைபெறுகின்றது. 5 வயதுக்குள்பட்ட 57 லட்சத்து 61 ஆயிரம் குழந்தைகளை இலக்கு வைத்து இந்த முகாம்கள் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக திருச்சி பெரிய மிளகுபாறை பகுதியில் உள்ள நகர்ப்புற சுகாதார மையத்தில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு வழங்கி தொடங்கி வைத்தார். அருகில் மாநகராட்சி கமிஷனர் முஜிபுர் ரகுமான் மற்றும் பலர் உள்ளனர்.

மேலும் இந்த முகாமில் கலந்து கொள்ள முடியாதவா்களுக்கு, அடுத்த 3 நாட்களுக்கு சொட்டு மருந்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதர உடல் நலக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அந்தந்த பகுதிகளில் மருத்துவா்களின் அறிவுறுத்தலின் பேரில் சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *