திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நெருஞ்சலக்குடி ஊராட்சியை சேர்ந்தவர் மாதவன் வயது 45. இவர் சொந்தமாக கேபிள் டிவி நடத்தி வருகிறார். இவருக்கு மஞ்சுளா தேவி என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.மஞ்சுளாதேவி லால்குடியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார்.

நெருஞ்சலக்குடி ஊராட்சியில் மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான 7 1/2 சென்ட் இடம் உள்ளது. இந்த இடத்தை தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்ததாக கூறப்படுகிறது. கோவில் கமிட்டியின் பொருளாளராக மாதவன் பதவி வகித்து வருகிறார். கோயில் இடத்தின் ஆக்கிரமிப்பை அளவீடு செய்து வருவாய் கோட்டாச்சியர் தலைமையில் விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை நடை பயிற்சி சென்றவர் மாதவனை அடையாளம் தெரிய மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்தனர். இந்த கொலைக்கான காரணம் கோயில் இடத்தை ஆக்கிரமித்த நபர்களால் நடந்திருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

 இந்த கொலை குறித்து லால்குடி டிஎஸ்பி சீதாராமன் தலைமையில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு மோப்பநாய் லீலி வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் லீலி கொலை நடந்த இடத்திலிருந்து திருச்சி லால்குடி மெயின் ரோடு வரை சென்று நின்று விட்டது. பின்னர் தடவியல் நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்த கொலை சம்பந்தமாக லால்குடியை சேர்ந்த மதி மற்றும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன், நாமக்கல் மாவட்டத்தினைச் சேர்ந்த சிவா, ஸ்டீபன் ஆரோக்கியராஜ், மேலசிந்தாமணியைச் சேர்ந்த மணிகண்டன் உள்ளிட்ட 5 பேரை லால்குடி போலீஸார் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *