திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் உறையூர் குறதெருவில் நடைபெற்ற மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ஏற்றத்தை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட மகளிர் அணி சார்பில் நூதன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

 பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வை கண்டித்து இருசக்கர வாகனத்திற்கு மாலை அணிவித்தும், அடுப்பில் விறகு வைத்தும், சமையல் சிலிண்டருக்கு மாலை அணிவித்தும் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாமன்ற உறுப்பினர் சுஜாதா, மகளிர் பிரிவு மோகனா, உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்